Breaking News

FACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   இவர் செய்த பாவத்திற்காக ஒரு பெரிய மலைப்பாம்பு  அவரை இப்போதே துன்புறுத்த ஆரம்பித்து விட்டது. எனவே மக்களே நீங்கள் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் உண்மையான பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அதனுடைய தண்டனை மிக கடுமையாக இருக்கும்.  என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?
 

கண்ணியமானவர்களே நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்  நம்முடைய  பாவங்களுக்கு இறைவனிடம் தண்டனை உண்டு (அதுவும் நாம் மரணித்த பிறகு கப்ரில் அல்லது நரகத்தில்) (இறைவன் பாதுக்காக்க வேண்டும்.)என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இந்த வீடியோவில் உள்ளது போன்று இந்த உலகத்திலே நாம் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்குமா என்றால் இறைவனின் கோபம் அதிகமாகும் பெரும் பாவத்தை செய்தால் தான். 

ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ காட்சி உண்மையில் நடந்தது இல்லை. அந்த வீடியோ கடந்த 2014 ம் ஆண்டு மலேசியாவில் உள்ள  நசீர் பிலால் கான் நடித்த தனா குபூர் தொடர்  நாடகத்தின் நடிப்பு காட்சியின் ஒரு பகுதியாகும்.

 
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


 
அட்மின் மீடியாவின் ஆதாரம்
 
 
 
அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback