Breaking News

FACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் பலரும்  சவுதி அரேபியாவில் சற்று முன் நிலநடுக்கம் தம்மாம் அருகே ராக்கா என்கிற இடத்தில் நடந்திருக்கிறது சேத விபரங்கள் தெரியவில்லை.....fz ர்ன்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


ஆம் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் வலம் வரும் வீடியோ நில நடுக்கத்தினால் ஏற்பட்டது அல்ல


மேலும் அந்த நிகழ்ச்சி 18.10.2020 அன்று நடந்தது ஆகும். அந்த சம்பவம் சவூதி அரேபியாவில் உள்ள அல் கோபார் பகுதியில் உள்ள  அல் சையத் டவுர் ஆகும் AL SAEED TOWER COLLAPSED ON RAQQA ON THE DAMMAM KHOBAR HIGHWAY யில் உள்ளது


மேலும் அந்த கட்டிடம் அருகில் உள்ள அந்த கார் பார்க்கிங் பில்டிங் பலகீனமான கட்டிடமாக இருந்திருக்கிறது. அதனால் மேல் தளத்தில் எடை அதிகரித்ததால் கீழே விழுந்து சேதம் ஏற்பட்டது அவ்வளவு தான்


இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது என்று பரப்ப ஆரம்பித்தது விட்டார்கள்.

 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=GboqhQrRgLQ


அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=hQFtv1xvCrQ

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback