இனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் சென்றால் செல்லும் : நாடெங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல்!
இனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் சென்றால் செல்லும் : நாடெங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல்
இனி நீங்கள் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்சி எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகல் ஆகியவற்றின் டிஜிட்டல் நகல்களை காண்பித்தாலே போதுமானது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இத்தகைய டிஜிட்டல் சான்றுகளின் நகல்கள் இன்று முதல் சட்டப்பூர்வமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக நீங்கள் உங்கள் சான்றிதழ்களின் புகைப்படங்களை காண்பிக்கக் கூடாது மாறாக செல்போன்களில் டிஜிலாக்கர் ஆப் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அதனை காண்பித்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: முக்கிய செய்தி