இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு...! .அடுத்த கட்ட தளர்வுகள் என்ன! இன்று வெளியாக வாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் மாதம்தோறும் சிரிது சிறிதாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த மாதம் நான்காம் கட்ட ஊரடங்கு பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் இன்று அடுத்தக்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிகின்றது
இதனிடையே முதல்வர் பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதில் திரையரங்குகள், மின்சார ரயில் சேவை, பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்