ஓர் அணியில் இஸ்லாமிய கட்சிகள்: ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு தேர்தலை சந்திக்கவேண்டும் எனவும் அதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மேற்கொண்டுள்ளது.என ஜமா அத்து உலமா சபை அறிவித்துள்ளது
கோப்பு படம்இதுகுறித்து ஜமா அத்து உலமா சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் ஓரணியாக நின்று எதிர் கொள்ள வேண்டும், சமுதாயத்தின் வாக்குகள் சிதறக்கூடாது, இதற்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் ஓரணியில் திரட்ட வேண்டும் என்று ஜமாஅத்துல் உலமா சபையிடம் ஆன்றோர், கல்வியாளர்கள், சமுதாய பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29.09.2020 ஆம் தேதி மதுரையில் நடந்த. மாநில ஜமாஅத்துல் உலமா செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மாநில நிர்வாகக் குழுவுக்கு செயல்படும் முழு அதிகாரம் அளித்துள்ளது.
எனவே தேர்தலில் சமுதாய ஒற்றுமை குறித்து உரிய நேரத்தில் தகுந்த முடிவுகளை ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாக குழு அறிவிக்கும். காலம் கனியும் முன் எடுக்கும் முயற்சிகள் பயன் தராது என்பதால் நிதானமாக இருக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்"
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சிகள் குறித்து தவறான புரிதல்களுக்கும், பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கும் உரிய விளக்கத்தை தேவைப்படும் சமயத்தில் ஜமாஅத்துல் உலமா சபை வெளியிடும்"என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் ஜமா அத்துல் உலமா சபையின் இந்த முன்னெடுப்பு வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி