Breaking News

இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் என பரவும் புகைபடம் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவர் என   ஒருபுகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படத்தில் இருப்பவரின் பெயர்  ரீமா பாயிஸ் இல்லை  அவர் பெயர்  அனுஷா ஸ்ரீரட்டேனே Anusha Sriratne  மேலும் இவர்தான் இலங்கையின் முதல் பெண் விமானி  ஆனால்  இவர் புகைபடத்தை வைத்து ரீமா பாயிஸ் செய்தியை பரப்புகின்றார்கள்


ரீமா பாயிஸ் என்பவர் இலங்கையில் உள்ள புதிய காத்தான்குடியில் பிறந்த அவர், தற்போது லண்டனில் விமான பயிற்சி தொடர்பாக படித்து வருகின்றார் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback