இஸ்லாம் என்னை மாற்றியது:திரை துறையில் இருந்து விலகிய சனாகான் கடிதம்
பாலிவுட்டில் அறிமுகமானவர் மும்பையை சேர்ந்த சனா கான்.
தமிழில் ஈ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழ் ரசிகர்களின் கவனைத்தை ஈர்த்தார் சனா. சிம்புவின் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
மேலும் ஹிந்தி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.இப்படி பிசியாக இருந்த சனா கான் திரையுலகை விட்டு விலகுவது என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
சகோதர சகோதரிகளே, இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நான் இருக்கிறேன்.பல வருடங்களாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். திரைத்துறையில் நான் இருந்த காலகட்டம் வரை எனக்கு நிறையப் புகழும், பெருமையும், செல்வமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ளன. அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஆனால், கடந்த சில நாட்களாக எனக்குள் ஏற்பட்டுள்ள ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டுள்ளது.
இந்த உலகுக்கு மனிதன் வந்ததற்குக் காரணம் பணத்தையும் புகழையும் தேடி ஓடுவதற்காகத்தானா?
ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதை அவன் எண்ணக்கூடாதா?
உதவி வேண்டுவோருக்காகப் பணி செய்வது மனிதனின் வாழ்க்கையில் ஒரு கடமையல்லவா!
இந்த இரு கேள்விகளுக்குமான விடையை நீண்ட நாள்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். முக்கியமாக இரண்டாவது கேள்வி. நான் இறந்த பிறகு எனக்கு என்ன ஆகும்?எனது மதத்தில் இதற்கான விடையைத் தேடியபோது, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பதை உணர்ந்தேன்.
நம்மைப் படைத்தவரின் கட்டளைக்கு ஏற்ப பணமும் புகழையும் தேடுவதே ஒரே குறிக்கோளாக இல்லாமல், பாவப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து, மனித குலத்துக்குச் சேவை புரியவேண்டும். என்பது அந்த வாழ்க்கையின் கடமையில் ஒரு அங்கம் இல்லையா?
தன்னைப் படைத்தவனின் ஆணைக்கேற்ப இந்த அடிமை வாழ்வதும், பணத்தையும், புகழையும் மட்டுமே ஒரே நோக்கமாகக் கொள்ளாமல் இருப்பதுமே சிறப்பாக இருக்கும்.
மனிதன் பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வதைத் தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும், தன்னைப் படைத்தவன் காட்டும் பாதையைப் பின்பற்ற வேண்டும்.எனவே, இன்று நான் ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன்.
இன்றிலிருந்து எனது திரைத்துறைக்கு, அதற்கேற்ற வாழ்க்கை முறைக்கு நிரந்தரமாக விடை கொடுத்து, என்னைப் படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி மனித இனத்துக்குச் சேவை செய்ய முடிவெடுத்துள்ளேன்.
அனைத்துச் சகோதர சகோதரிகளும் எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோருகிறேன்.
அவர் எனது மனந்திரும்புதலை ஏற்க வேண்டும். என்னைப் படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி வாழவும், மனித இனத்துக்குச் சேவை செய்யவும் நான் எடுத்திருக்கும் முடிவின் படி இணக்கத்துடன் வாழ எனக்குத் திறனைத் தந்து அதில் உறுதியுடன் இருக்கும் மன வலிமையைத் தர வேண்டும்.
எனவே, இனி எந்தவிதமான பொழுதுபோக்குத் துறை தொடர்பான எந்த விதமான வேலைகளுக்கும் என்னைத் தொடர்புகொள்ள வேண்டாம் என அனைத்துச் சகோதர சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்".இவ்வாறு சனா கான் தெரிவித்துள்ளார்
மேலும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்த திரைத்துறை தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் சனா கான் நீக்கியுள்ளார்
Tags: வைரல் வீடியோ