விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை :தாயுக்கும் சேயுக்கும் உற்சாக வரவேற்ப்பு
தில்லியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தில்லியில் இருந்து நேற்று இரவு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் சென்ற கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது விமானத்தை தரையிறங்கும் முன்பே கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகமானதை தொடர்ந்து விமான ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர் அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிரந்தது
இந்த தகவல் பெங்களூரு விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாயையும் குழந்தையையும் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பலத்த உற்சாக வரவேற்புடன் குழந்தை பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இது தொடர்பான விடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Tags: வைரல் வீடியோ