#BIGBREAKING : வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் - தமிழக அரசு
அட்மின் மீடியா
0
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ,வெளிமாநிலத்திலிருந்து (பாண்டிச்சேரி தவிர) தமிழகம் வருபவர்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்பவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்