7.5.% உள் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
அட்மின் மீடியா
0
7.5.% உள்இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 26-ம் தேதி மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அக்டோபர் 29-ம் தேதி பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், உடனடியாக உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.