16 மாவட்டங்களில் மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்
16 மாவட்டங்களில் மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்
நேற்று மதியம் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையை கடந்து தற்போது ஆந்திர நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்