அந்தமானில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ; 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அட்மின் மீடியா
0
அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனால்அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்
சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு:
Tags: தமிழக செய்திகள்