Breaking News

FACT CHECK: பாண்டிசேரி மாணவர் ராமு கண்டுபிடித்த கொரானா மருந்து என பரவு வதந்தி

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு மகிழ்ச்சியான செய்தி இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட் 19-க்கான வீட்டு வைத்தியங்களைக் கண்டுபித்தார். இது WHO முதலில் ஒப்புதல் அளித்தது. ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு சிறிய இஞ்சி சாறு தொடர்ந்து 5 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், கொரோனாவின் விளைவு 100% வரை அகற்றப்படலாம் என்பதை அவர் நிரூபித்தார். உலகம் முழுவதும் இந்த சிகிச்சையை எடுக்கத் தொடங்குகிறது. இறுதியாக 2020 இல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

தேன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது

அதே போல் கருப்பு மிளகும் உடலுக்கு நல்லது

மேலும் இஞ்சிசாறும் உடலுக்கு நல்லது

அதனை யாரும் மறுக்கவில்லை

ஆனால் இது கொரானாவை கட்டுபடுத்தும் என்று சொல்வது தான் ஏற்க்கமுடியவில்லை

மேலும் இப்படி கூறப்படும் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு இதுவரை  ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மிளகுத்தூள் கோவிட்-19ஐ தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது  என உலக சுகாதார அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters?gclid=CjwKCAjwjLD4BRAiEiwAg5NBFqI-Y7exSBLSsAiSJfhuReRreyCOw029mFtDVLQ4qE7fOqRuYtlixxoCcEUQAvD_BwE#pepper

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback