Breaking News

FACT CHECK: ஹரியானாவில் பாஜக எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் என பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நெற்றியில் சந்தனம் வைப்பது போல் கிட்ட போய் ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள்….!! என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

 
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது நடந்தது இல்லை, அந்த வீடியோ கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சம்பவம் ஆகும்

மேலும் ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடியதை எதிர்த்து கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.பி ராஜ் குமார் ஷைனி மீது இங்க் ஊற்றி அவரை தாக்கியுள்ளார்கள் மேலும் தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை 


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=gP96KcVoZPg

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback