TANTRANSCO Recruitment 2026 Fake news மின்வாரியத்தில் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் என பரவும் வேலை வாய்ப்பு செய்தி உண்மை என்ன
அட்மின் மீடியா
0
TRANSCO Recruitment 2026 Fake news மின்வாரியத்தில் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் என பரவும் வேலை வாய்ப்பு செய்தி உண்மை என்ன
பரவும் செய்தி:-
சமூக வலைதளங்கள் மற்றும் சில குழுக்களில் TANTRANSCO Recruitment 2026 என்ற பெயரில் ஒரு வேலைவாய்ப்பு தகவல் பரவிவருகிறது. இதில் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை என்ன:-
மேலே உள்ள செய்தி சமூக வலைதளத்தில் பலரும் ஷேர் செய்து வந்த நிலையில் தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்" என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது மற்றும் மோசடியானது ஆகும்.
இத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை. தகுதியான மற்றும் உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அனைத்தும் எங்களது அதிகாரப்பூர்வ இணையதளமான tnpdcl.org பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாறவோ அல்லது பணம் செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெளிவாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இத்தகைய எந்தவொரு ஆட்சேர்ப்பு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பு:-
TANTRANSCO அல்லது TNEB வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் கிடைத்தால், முதலில் அது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில் இல்லாத எந்த அறிவிப்பையும் நம்ப வேண்டாம்.
மேலும், வேலைவாய்ப்பு உறுதி செய்வதாக கூறி யாராவது பணம் கேட்டால் உடனே அந்த தகவலை தவிர்க்க வேண்டும்.
