Breaking News

மாற்றுதிறனாளிகளுக்கு டோல் கட்டணம் இல்லையா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

மாற்று திறனாளிகளுக்கு டோல் கட்டணம் இல்லை  என்பது உண்மைதான் 


மேலும் தற்போது உள்ள ஃபாஸ்டேக் முறை  கடந்த டிசம்பர் 15, 2019-ல் இருந்துதான், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தற்போது மாற்றுதிறனாளிகளுக்கு இலவச பாஸ்டேக் அட்டைமூலம் அவர்கள் டோல்கேட்டில் இலவசமாக பயனம் செய்யலாம்
அவர்கள் தங்களின் வாகனங்களை, அந்தந்தப் பகுதியின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையான சான்றுகளைக் கொடுத்து, (In-Valid) தகுதியற்ற வாகனமாக மாற்றிப் பதிவுசெய்து, அதைக் கொண்டு ஃபாஸ்டேக் பெற்று, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் (Free Of Cost) பயனம் செய்யலாம்


ஃபாஸ்டேக் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதலில்

1. தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின் மருத்துவமனையை அணுகி விண்ணப்பித்து, தங்கள் குறைபாட்டை நிரூபிப்பதுடன், அதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து Disability Certificate பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தை, தங்களின் பயன்பாட்டுக்காகப் பிரத்யேகமாக மாற்றிவடிவமைத்து, அதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காட்டி, தங்கள் வாகனத்தை (Invalid-Carriage) ஆகப் பதிவு செய்துவிட வேண்டும்.

3.  தேசிய நெடுஞ்சாலை துறையின் வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று Disability Certificate (ph), Invalid Carriage Registration Certificate, ஓட்டுநர் உரிமம் (Handicapped), ஆதார் அட்டை, பான் அட்டை, இருப்பிடச் சான்று, புகைப்படம் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் ஃபாஸ்டேக் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதுவரை ஃபாஸ்டேக்கைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளாத  மாற்றுத் திறனாளிகள், தங்கள் அருகில்  உள்ள  சுங்கச்சாவடி அலுவலகத்துக்குச் சென்று, முன்பதிவு செய்து ஃபாஸ்டேக்கை பெற்றுக்கொள்ளலாம் 

அட்மின் மீடியாவின் ஆதாரம்.

https://fastag.info/fastag-handicapped.php


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback