Breaking News

மொபைல் மூலம் டிரைவிங் லைசன்ஸ் அப்ளை செய்வது எப்படி

அட்மின் மீடியா
0
மொபைல் மூலம் டிரைவிங் லைசன்ஸ் அப்ளை செய்யுங்கள்




பழகுநர்,  ஓட்டுநர் உரிமங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணத்தையும் இணையம் வழியாகவே செலுத்தலாம்

L.L.R

லைசன்ஸ் ரினிவல்

பேட்ச்

லைசன்ஸ் திருத்தம்

ஆகியன ஆன் லைன் மூலம் விண்னபிக்கலாம்

ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில்  https://sarathi.parivahan.gov.in/sarathiservicecov11/stateSelection.do?stCd=TN  இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


 அதில்   அப்ளை ஆன்லைன்  கிளிக் செய்து அதில் 

புது கற்றுணர் உரிமம் (New Learner Licence)

புது ஓட்டுனர் உரிமம் (New Driving Licence)

ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)

என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும்.

 உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம்.


முன்னதாக ஓட்டுனர் உரிமம் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுனர் உரிமத்தை டூப்ளிகேட் வாங்க இங்கேயே அப்ளை செய்துகொள்ளலாம்.


 
புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்யவும். 
 
உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் இப்பொழுது வரும்.


உங்கள் விவரங்களை கற்றுணர் உரிமம் ஃபார்ம் இல் பூர்த்தி செய்யுங்கள். 

கியர் வாகனத்திற்கு கற்றுணர் உரிமம்

கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுணர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இறுதியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பியுங்கள்.

அடுத்து ஆன் லைன் மூலம் கட்டணம்  கட்டுங்கள்

இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்

LLR சான்று பெற்று 30 நாட்கள் முடிந்தவர்கள் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும்

பிறகு வெப்சைட்டில் பர்மனன்ட் லைசன்சுக்கு அப்ளை செய்ய வேண்டும். உங்களின் லேர்னர் லைசன்ஸ் தகவலை அங்கு நிரப்பி சப்மிட் செய்ய வேண்டும். 

அப்பாயின்ட்மென்ட் தேதியில் சம்பந்தப்பட்ட ஆபீஸ் சென்று வாகனம் ஓட்டும் சோதனையை மேற்கொள்ள வேண்டும். 



இதே வழிமுறை படி உங்களுக்கான புதிய ஓட்டுனர் உரிமம் மற்றும் காணாமல் போன ஓட்டுனர் உரிமத்தை புதியதாய் வாங்கிக்கொள்ளலாம். இதே போல் பழைய ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பித்தும் கொள்ளலாம்.

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback