இராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலையில்மதம் சம்மந்தமான பிரச்சனை இல்லையென காவல்துறை தகவல் !
அட்மின் மீடியா
0
கடந்த 31.08.2020 அன்று இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 23 வயதான அருண் பிரகாஷ் மற்றும் 20 வயதான யோகேஸ்வரன் ஆகிய இருவரும் கள்ளர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர் அவ்விருவரையும் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அருண் பிரகாஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் இராமநாதபுரம் கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள் மேலும் இது ஒரு மதப்பிரச்சையால் நடந்ததாகவும் செய்திகள் பரப்பி வருகின்றனர்
இந்நிலையில் அருண் பிரகாஷ் கொலை சம்மந்தமாக இராமநாதபுரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அருண் பிரகாஷ் கொலை சம்மந்தமாக இராமநாதபுரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த விளக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்
என இராமநாதபுர காவல்துறையின் அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்கள்
என இராமநாதபுர காவல்துறையின் அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்கள்
இராமநாதபுரம் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை.@VarunKumarIPSTN— Ramanathapuram District Police (@RmdDistPolice) September 2, 2020
மேலும் விவரங்களுக்கு:https://t.co/00HO5dDRoG
Picture Credit: https://t.co/95VmpYrupH pic.twitter.com/y6OHbt7pol
Tags: FACT CHECK