Breaking News

பெற்றோர்களே எச்சரிக்கை: வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி பலி

அட்மின் மீடியா
0


கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர் - ஒன்றை வயது குழந்தை பலி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

பவித்ரா தனது தாய் வீட்டுக்கு சென்று குழந்தையுடன் இரண்டு நாள் தங்கியிருந்த நிலையில் இந்நிலையில் நேற்று காலை பவித்ரா குளிப்பதற்காக மின்சார வாட்டர் ஹீட்டர் கருவியைகுடத்தில் பொருத்தி தண்ணீர் காய வைத்துள்ளார்  பின்பு  அவர் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில்  விளையாடிக் கொண்டிருந்த அனன்யா தண்ணீரில் கையை வைத்த உடன் மின்சாரம் தாக்கியதில் குழந்தை மயங்கி விழுந்தது. குடம் கீழே விழுந்த சப்தம் கேட்ட தாய் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் பாதி வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

எனவே குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் வாட்டர் ஹீட்டர் மற்றும் மின்சாதன பொருட்களை மிகவும் கவனமாக குழந்தைகள் தொட முடியாத இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை.இது போன்று ஹீட்டர்களை பயன்படுத்தும் போது குழந்தைகள் அதை தொடாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback