Breaking News

ஆன்லைனில் பான்கார்டு விண்னப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
ஆன்லைனில் பான்கார்டு விண்னப்பிப்பது எப்படி



முதலில் கீழ் உள்ள இணையத்தள முகரிக்குச் செல்லவும்

https://tin.tin.nsdl.com/pan/

இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், 

தகவல் அறிதல், 

ட்ராக்கிங்க் ஸ்டேடஸ்,

பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் 

மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது
திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் இருக்கும்
.
அதில் விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

பான் கார்ட் விண்ணப்பம்:

புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும்.

https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanApp என்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். 


பான் விண்ணப்பத்திற்காக கட்டணத்தை காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூல்ம் செலுத்தலாம். 
 
பணம் செலுத்தியபிறகு 

கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ‘அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி தோன்றும் அதனை பிரிண்ட் எடுத்து போட்டோவை ஒட்டி, கையப்பமிட்டு  ஆதார்கார்டு இனைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்

National Securities Depository Limited,
Trade World,
A Wing, 4th Floor,
Kamala Mills compound, Senapati Marg,
Lower parel,
Mumbai-400 013. 

அனுப்பும் போது அஞ்சல் உறையின் மீது ‘அப்ளிகேஷன் ஃபார் பான்- அக்னாலேஜ்மென்ட் நம்பர்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

15 நாட்களுக்குள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட் வீட்டுக்கு வரும்

விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண் ஒன்று கிடைக்கும், 

அதை வைத்துக்கொண்டு https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்று சரிபார்த்துக்கொள்ளலாம். 

அதில் 4 மணி நேரத்தில் உங்களுக்கான பான் எண் வந்துவிடும் E pan உங்கள் மெயில் ஜடிக்கு வந்துவிடும்





Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback