தனியார் பள்ளிகள் முழு கட்டணங்களை கேட்டால் ஒரே ஒரு மெயில் அனுப்புங்க- சென்னை ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 % முழு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து இனி நீங்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்தக்கோரி பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆகவே, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சார்பான கல்விக் கட்டணம் குறித்தான புகாரினை feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சென்னை வாழ் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். சீதாலட்சுமி அவர்கள் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்