Breaking News

ஆன்லைன் விளையாட்டில் ரூ.90 ஆயிரம் இழந்த சிறுவன்: எச்சரிக்கை பெற்றோர்களே

அட்மின் மீடியா
0

ஆன்லைன் விளையாட்டில் ரூ.90 ஆயிரம் இழந்த சிறுவன்: பெற்றோருக்கு தேவை விழிப்புணர்வு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். ஆன்லைன் விளையாட்டில் மோகம் கொண்ட சிறுவன் 'ப்ரீ பயர்' என்ற விளையாட்டை விளையாடியுள்ளார். 

கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் இருந்த சிறுவன்  தனது தந்தையின் மொபைல் போனில் ‘ப்ரீ ஃபையர்’ எனும் கேமை ஆன்லைன் மூலம் விளையாடி வந்துள்ளார்

கேம் அப்டேட் கேட்கும் நேரத்தில், தனது தாயின் ஏடிஎம் கார்டின் யுபிஐ நம்பரை பதிவு செய்துள்ளார் இதனால் தினசரி சுமார் 300 , 500 , 700 என பணம் போயுள்ளது இவ்வாறு பலமுறை செய்ததால் அவரது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் வரை பணம் பறிபோனது. 


இதனிடையே இவரது பெற்றோர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றனர் அப்போது கணக்கில் பணம் குறைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது, ஆன்லைன் விளையாட்டிற்கு கட்டணமாக சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து மகனிடம் விசாரித்தபோது நடந்தவற்றை கூறி ஒப்புக்கொண்டுள்ளார்.பணத்தை மீட்க முடியாது என விசாரித்து தெரிந்து கொண்ட பெற்றோர், மகனுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். 

ஒரு நோட்டில் 1 முதல் 90 ஆயிரம் வரை எழுத வேண்டும் என நூதன தண்டனையை நேற்று வழங்கினர். இதனையடுத்து 3 ஆயிரம் வரை எழுதிய சிறுவன் கை வலிப்பதாக கூறினான். அதனை தொடர்ந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது என பெற்றோர் அறிவுறுத்தினர்.மேலும் இதனை தான் வெளியில் சொல்வது என்னை போல் யாரும் ஏமாறகூடாது என்பதால் தான் எனவே பெற்றோர்களே ஜாக்கிரதை

Tags: தமிழக செய்திகள்

Share this