செல்போன் பறித்த திருடனை துரத்தி பிடித்த 15 வயது சிறுமி.! வீடியோ
அட்மின் மீடியா
0
பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் நகரில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது வீட்டிற்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த சிறுமியிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த சிறுமி தனது போனை விட்டுக்கொடுக்காமல் செல்போன் பறித்தவனிடம் பைக்கில் வந்த இருவரில் பின் பக்கம் அமர்ந்து இருந்த ஒருவனை கீழே தள்ளி வீரத்துடன் போராடுகிறாள்.
உடனே அந்த செல்போன் திருடன் அருகில் இருந்த ஆயுதத்தை கொண்டு சிறுமியை தாக்க முயற்சிக்கிறான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அத்தெருவினர் ஓடி வந்து செல்போன் பறித்தவனை பிடிக்கின்றனர். பைக்கில் இருந்த மற்றொரு திருடன் பைக்கை விரட்டி சென்றுவிட்டான்.
இந்த காட்சி அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
#Punjab: 15-year-old girl fights snatchers to save her mobile phone in #Jalandhar pic.twitter.com/MTqYvwiXPr— The Tribune (@thetribunechd) September 1, 2020
Tags: இந்திய செய்திகள்