FACT CHECK: மரம் நடுவது இஸ்லாத்திற்க்கு எதிரானது என கூறி பரவும் வதந்தி வீடியோவின் உண்மை என்ன?.
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மரம் வளர்ப்பு திட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடங்கினார். ஆனால் பாகிஸ்தானி மக்கள் மரம் நடுவது இஸ்லாம் மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது. அந்த மரகன்றுகளை பிடிங்கி எரியும் காட்சி என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் என்ற பகுதியில் கடந்த 9ம் தேதி நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்
அந்நிகழ்வில் கைபர் பகுதியிலும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது ஆனால் அந்த இடம் பிரச்சனைக்கு உரிய இடமாகும் பழங்குடியினருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக இரு குழுக்களிடையே தகராறு இருந்து வந்துல்லது
அந்த இடத்தில் ஒரு குழு மரம் நடுவதற்கு அனுமதி அளித்ததாகவும், மற்றொரு குழு அவற்றை பிடுங்கி எறிந்ததாகவும் பாகிஸ்தானின் பெஷாவர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது
நிலம் தொடர்பாக இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை இஸ்லாமிய மதம் குறித்து பொய்யாக பரப்புகின்றார்கள்
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.34
ஸஹீஹ் புகாரி : 6012.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி