FACT CHECK: திபெத்தில் மேகங்கள் கீழே இறங்கிய வீடியோ உண்மையா?Clouds on Earth in Tibet fake news..
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் திபெத்தில் மேகம் கீழே இறங்கிய அற்புத வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மேகம் என்றால் என்ன:-
மேகம் என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத்துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் மேகங்கள் காணப்படுகின்றன
இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன. காற்று அதன் பனிநிலைக்கு குளிரும்போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவு பெறும்போது பனிநிலையின் வெப்பநிலை உயர்ந்து சூழல்வெப்பநிலையை அடைகிறது. அதாவது காற்று வெப்பமடையும் போது மேகங்கள் உருவாகின்றன நிலப்பரப்பு கதிர்வீச்சு. அது வெப்பமடையும் போது, காற்று அதன் பனிப் புள்ளியை அடையும் வரை உயர்ந்து உயர்கிறது,
மேகங்கள் கீழ் இறங்குமா:-
முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் பொதுவாக மேகங்கள் கீழே இறங்கி வராது காரணம் ஏன் என கீழே ஆதாரத்தில் உள்ளது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவின் உண்மை என்ன:-
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மேகங்கள் இல்லை, அது திபெத்தும் இல்லை
மேகங்கள் வெள்ளை அல்லது கருப்பு ஆகிய இரண்டுகலரில் தான் இருக்கும் ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ வை நன்றாக பார்த்தால் தெரியும் அது பழுப்புகலரில் இருக்கும்
அது மண் புயல் ஆகும் ,அதாவது புழுதிபுயல் அந்த வீடியோ கடந்த 2016 ம் ஆண்டு சீனாவில் நடந்தது ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Wall of sand as high as 100 meters roars through Inner Mongolia Monday for over 40 min; visibility less than 10 m pic.twitter.com/zUNxWxIBIG— China Xinhua News (@XHNews) May 24, 2016
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Why Don’t Clouds Fall to Earth due to Gravity?
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/nasa-knows/what-are-clouds-k4.html
அட்மின் மீடியாவின் ஆதாரம்
மேகங்கள் ஏன் புவி ஈர்ப்பு சக்தியினால் பூமியில் வீழ்வதில்லை
Tags: FACT CHECK மறுப்பு செய்தி