தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது : தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தனித் தேர்வர்களும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்பவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அம்மனுவில் பதினொன்றாம் வகுப்பு,
மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை நடைபெற்றுவருவதால் தனித் தேர்வர்கள் அதில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தனித் தேர்வர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதால் ஒரு ஆண்டு காலத்தை இழக்க நேரிடும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
அம்மனு மீதான விசாரனை இன்று நடை பெற்றது அதில் தமிழக அரசு சார்பில்
அரசு தரப்பு வழக்கறிஞர் கூறப்பட்ட பதில் மனுவில் தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது எனவும் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு நடத்தி முடிவு இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்
கூறியதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது
Tags: கல்வி செய்திகள்