Breaking News

பஹ்ரைன் மாலில் விநாயகர் சிலையை உடைத்த முஸ்லீம் பெண் உடனடி நடவடிக்கை எடுத்த பக்ரைன் போலீஸார்

அட்மின் மீடியா
1
பஹ்ரைன் மாலில் விநாயகர் சிலையை உடைத்த முஸ்லிம்பெண்  உடனடி நடவடிக்கை எடுத்த பக்ரைன் போலீஸார் 

கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை புர்கா அணிந்த முஸ்லிம்பெண் கீழே போட்டு உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 



ஆனால் இங்கு பலரும் இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள் ஆனால் அந்த சம்பவம் பஹ்ரைனில் உள்ள ஜூபேர் பகுதியில் உள்ள ஒரு மாலில் நடந்தது ஆகும்


மேலும் அந்த சம்பவம் தொடர்பாக, 54 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே ஜூஃபைைரில் உள்ள ஒரு கடையை சேதப்படுத்தியதாகவும், மத சிலைகளை உடைத்ததற்காகவும் அழைத்து வரப்பட்டு சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தன் டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது



சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோ குறித்து, மூலதன கவர்னரேட் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார், 54 வயதான ஒரு பெண், வேண்டுமென்றே ஜுஃபேரில் உள்ள ஒரு கடையை சேதப்படுத்தியதற்காகவும், மத சிலைகளை உடைத்ததற்காகவும் வரவழைக்கப்பட்டார். வழக்கை பொது வழக்கு விசாரணைக்கு கொண்டு செல்ல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும் பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் அல் கலீஃபா அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில்  அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மத அடையாளங்களை மீறுவது பஹ்ரைன் மக்களின் இயல்பு அல்ல. இது ஒரு குற்றம் ... வெறுப்பு மற்றும் நிராகரிக்கப்படுகிறது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்."இங்கே, அனைத்து மதங்களும், பிரிவுகளும், மக்களும் இணைந்து வாழ்கின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்






Burqa clad woman slams Ganpati idols on floor in Bahrain supermarket, video goes vira

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback

1 Comments