6 மாதங்களாக வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற செய்தி பொய்யானது....
அட்மின் மீடியா
0
ஆறு மாதங்கள் வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என நிதித்துறை விளக்கமளித்துள்ளது.
பொதுவாக ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் தகுதி சான்றிதழ் பெறப்படும். தற்போது கொரோனா காலம் என்பதால் அதை சமர்ப்பிப்பதில் இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதனால் மாதந்தோறும் ஓய்வூதியம் எடுப்போருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து 6 மாதமாக எடுக்காதவர்களின் விவரங்களை சேகரித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அளிக்கவுள்ளோம்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்கு பிறகும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்துவதை தவிர்க்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சமயமூர்த்தி விளக்கமளித்தார்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி