பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட கலவரம்.. பெங்களூரில் கலவரம்,2 பேர் பலி..என்ன நடந்தது?
அட்மின் மீடியா
0
பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் போஸ்ட் காரணமாக இந்த கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாம் குறித்து இவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்
உடனடியாக அப்பகுதி மக்கள் நவீனுக்கு எதிராக புகார் அளித்துளார்கள்அந்த புகார் மீது பெங்களூர் டிஜே ஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. என்ற கோபத்தில், அங்கு ஒரு தரப்பினர் கலவரத்தில் குதித்து உள்ளனர். டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி அங்கிருக்கும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
மேலும் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலியானார்கள், 30 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் பெங்களூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மேலும் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Breaking | Section 144 has been imposed in Bengaluru after major ruckus breaks out over MLA kin’s alleged social media post regarding Prophet Muhammad. 110 protestors have been arrested & 60 cops have been injured.— TIMES NOW (@TimesNow) August 12, 2020
Details by Imran. pic.twitter.com/BSCCJsI3Vh
Tags: இந்திய செய்திகள்