FACT CHECK: கலெக்டர் நோயாளியை எப்படி நலம் விசாரிக்கிறார் என்று ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன??
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஒரு கலெக்டர் நோயாளியை எப்படி நலம் விசாரிக்கிறார் இவரை அரசு தண்டிக்கும் வரை இந்த புகைபடம் இணையத்தில் வலம் வர செய்யுங்கள். என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மையானது தான்.
ஆனால் அது தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது. அதேபோல் தற்போது நடந்ததும் கிடையாது.
அந்த சம்பவம் கடந்த மே மாதம் 2016 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது.
அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர். ஜெகதீஸ் ஆவார். அந்த செயலுக்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார்.
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி