Breaking News

FACT CHECK :ரஷ்ய விஞ்ஞானிகள் பதிவு செய்த நரகத்தின் சத்தம் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பூமிக்கு அடியில் மனிதர்கள் அலறல் சத்தம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போல் பூமியில் போர் போட்டது உண்மைதான் அந்த திட்டம் ரஷ்யாவினால் ஆரம்பிக்கப்பட்டது, கோலா சூப்பர் டீப் போர்வெல் கடந்த 1970 ம் ஆண்டு தொடங்கினார்கள்


1992 ம் ஆண்டு  அந்த போர் 12 கிலோமீட்டர் தூரம் வரை போடபட்டது  ஆனால் அந்த 12 கிலோமீட்டர் ஆழத்திற்க்கு பிறகு அதிகம் வெப்பம் காரணமாக அந்த போர் திட்டம் கடந்த 1992 ம் ஆண்டு கைவிடப்பட்டது, மேலும் அந்த துளையினை மூடிவிட்டார்கள்.

மேலும் இதுதான இதுவரை பூமியில் போடபட்ட மிகவும் ஆழமான துளை ஆகும்.

அந்த ஆழ்துளையில் டச்சு நாட்டை சேர்ந்த lotte Geevan lowered என்ற பெண்மணி அந்த துளையில் மெக்ரோபோனை விட்டு அதில்  சப்தங்களை கேட்டது உண்மை தான்,

ஆனால் அந்த சப்தத்தை கூடுதல் ஒலி மாற்றம்(Sound track modification) கொடுத்து மாற்றி சமூகவலைதளங்களில் பரப்பட்டுவருகின்றது 1990 ம் ஆண்டுகளில் இருந்து,

சமூக வலைத்தளத்தில் பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் வரும் சப்தம் 1972 இல் வெளியிடப்பட்ட Baron Blood எனப்படும் படத்தில் இருந்து எடுக்கப் பட்டது ஆகும்

இந்த சம்பவம் பொய் என நிருபிக்க முதலாவதாக இந்த பதிவு வெளியிடப்பட்ட 1989 இல் இருந்தே பல்வேறு ஆதாரங்களை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







இன்னும் நம்பும் உங்களுக்கு அட்மின் மீடியாவின் சில கேள்விகள். 

(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம்: 5503)

இந்த ஹதீஸில் தெளிவாக தெரிகிறது மண்ணரையின் வேதனையை நம்மால் கேட்க முடியாது என்று, 14 கிலோமீட்டர் அல்ல இன்னும் எத்தனை 100 கிலோமீட்டர் துளையிட்டாலும் நம்மால் மண்ணரையின் வேதனையை கேட்க முடியாது என்பது தான் இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைபாடு. 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.bbc.com/future/article/20190503-the-deepest-hole-we-have-ever-dug

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Kola Superdeep Borehole
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Well to Hell sound fake 

அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.wired.com/2014/01/an-artist-records-the-mysterious-rumblings-of-middle-earth/

Tags: FACT CHECK மார்க்க செய்தி

Give Us Your Feedback