Breaking News

FACT CHECK: பவண்டோ வாங்காதீங்க என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த  சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பவண்டோ வாங்காதீங்க அதில் அந்த கம்பெனியில் வேலை செய்யும் நபர் ஒருவரின் ரத்தம் அதில் கலந்துவிட்டது, அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் அந்த நபருக்கு எயிட்ஸ் உள்ளது என்று  ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

பவண்டோ குளிர்பானத்தில் ஹெச்.ஐ.வி நோயாளியின் இரத்தம் கலந்து விட்டதாக அந்த வதந்தி செய்தி பல ஆண்டுகளாக இணையதளத்தில் பரவி வருகின்றது

மேலும் இணையதளத்தில் பவண்டோ என்று இல்லாமல் மாஸா பெயரிலும் இந்த வதந்தி பரவியது 

சரி இது உண்மையா என்றால் அது உண்மையில்லை

அது போல் ஒரு சம்பவமே நடக்கவில்லை.

மேலும் காவல் துறையும் அது போல் அறிவிக்கவில்லை

சரி குளிர்பானம் மூலம் எயிட்ஸ் பரவுமா?

குளிர்பானம் மூலமாகவும், த்ண்ணீர் மூலமாகவும், உணவுபொருட்கள் மூலமாகவும் எயிட்ஸ் நோய் பரவாது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது



மேலும் பவண்டோ மூலம் எயிட்ஸ் பரவும் என்று கடந்த 2019 ம் ஆண்டே வதந்தி பரவியது அதற்க்கு  அட்மின் மீடியா மறுப்பும் போட்டுள்ளது.

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback