FACT CHECK:உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை அடித்து நிர்வாணப்படுத்தினார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்
என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த சம்பவம் கடந்த 2016 ம் அன்று பாகிஸ்தானில் நடந்தது
மேலும் குடும்ப பகை காரணமாக அவரை மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி அடித்துள்ளார்கள் மேலும் அந்த சம்பவம் தொடர்பாக 7 குற்றவாளிகளை போலீசார் அப்போதே கைதும் செய்துள்ளனர்.
ஆனால் சிலர் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் நடந்தது என்றும், உத்திரபிரதேசத்தில் நடந்தது என்றும் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி