நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அட்மின் மீடியா
0
ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம், இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்.
அதன்படி, நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
குடும்ப அட்டைகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்களை தமிழக அரசு வழங்க உள்ளது.
Tags: தமிழக செய்திகள்