Breaking News

கார்டூன் கண்டனம் : ஜமா அத்துல் உலமா அறிக்கை

அட்மின் மீடியா
0
                                                  கார்ட்டூன் கண்டனம்

வர்மா என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி சமூக ஊடகங்களில் கார்ட்டூன் வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது இது உலக முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது

யாரோ சிலரை எதிர்ப்பதாக சொல்லி முஸ்லிம்களின் மன உணர்வை கொந்தளிக்க வைப்பது அமைதிப்பூங்காவாக இருக்கிற தமிழகத்தை கலவரக்காடாக மாற்றும் ஒரு திட்டமிட்ட சதிவலையின் பின்னல் இது என்பதை உணர முடிகிறது.

தமிழக காவல்துறை குற்றவாளியை உடனடியாக கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது முன்னரே அறிவித்து விட்டு, ஒரு சமுதாயத்திற்கு எதிராக 24 மணி நேர கெடுவிதித்து கலவரத்தை உருவாக்கும் சதித்திட்டங்களில் சிலர் பகிரங்கமாக ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை அவர்கள் அறவே மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது, இது சமூகத்திற்கு தவறான சமிக்ஞைகளை தந்து விடக்கூடியது, எனவே காவல்துறை கடுமையான சட்ட விதிகளின் கீழ் இத்தகையோருக்கு தண்டனை பெற்றுத் தர முயற்சி செய்ய வேண்டும் இதற்குப் பின்னணியில் இருந்து  செயல்படுவோரையும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்

நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எதிரான சில சக்திகள் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கிற நிலையில் எப்படியாவது தமிழகத்தில் தங்களுக்கு சார்பான ஒரு சூழலை உருவாக்கிட இங்குள்ள சமூக அமைதியை குலைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன, இந்த கீழ்த்தரமான கார்ட்டூன் பின்னணியிலும் அத்தகைய சக்திகளே திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளன, முஸ்லிம் சகோ ர்கள் இதை உணர்ந்து கொண்டு சமூக அமைதியை கட்டிக் காக்க அதிகப்படியான பொறுமையை கைகொள்ளுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது

முஹம்மது நபி (ஸல்) அவர்களை நேசிக்கும் மக்கள் இந்த கீழ்த்தரமான கார்ட்டூன் பரப்பும் வேலையை ஒரு போதும் செய்ய வேண்டாம் எத்தகைய அநாகரீகமான இழி சொற்களையும் தாண்டி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ்க் கொடி வானம் தொட வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நாம் அறிந்தே இருக்கும். இந்த கார்டூன் கூட அந்த கூடாரத்திலிருந்து சிலர் முஹம்மது நபி (ஸல் அவர்களை பின் பற்றி வரக் காரணமாக கூடும். அதுவே முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய அம்சம். ஆகவே முஸ்லிம் பொதுமக்கள் உணர்ச்சி வசப்பட்டு சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவதை, வீடியோக்களை வெளியிடுவதை, கீழ்த்தரமான கமெண்டுகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது

குற்றவாளியின் மீது தகுந்த நடவடிக்கை கோரி அரசிடமும் காவல்துறையிடம் முறையிடவும் தேவையெனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை முயற்சிகளை மேற்கொள்ளும். இன்ஷா அல்லாஹ் அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்

இப்படிக்கு


Dr.V.S அன்வர் பாதுஷா உலவி

Tags: மார்க்க செய்தி

Share this