Breaking News

குவைத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் அபாயம்

அட்மின் மீடியா
0
வெளிநாட்டவருக்கான மசோதாவிற்கு குவைத் நாடு ஒப்புதல் அளித்துள்ளதால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.


வெளிநாட்டவர்களுக்கான ஒதுக்கீட்டு முறைக்கு அழைப்பு விடுக்கும் வரைவுச் சட்டம் ஒன்று தற்பொழுது தேசிய சட்டமன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது 

இந்த மசோதா, சம்பந்தப்பட்ட குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பான சட்டம் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம் மசோதாவில் குவைத்தில் வேலைக்காக இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வதால்  இந்தியர்களின்  மக்கள் தொகை, குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதம் என்ற அளவை தாண்டக்கூடாது எனவும் இது தொடர்பான ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க  சமபந்தப்பட்ட சட்ட குழுவிற்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. குவைத் நாடாளுமன்றம், வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, 

இதன் விளைவாக சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறக்கூடும் அபாயம் உள்ளது. 

source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback