Breaking News

ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு: தளர்வுகள் என்ன! என்ன!முழு விவரம்

அட்மின் மீடியா
0
ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது ஆட்சியரிடம் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் தமிழக அரசு
 


ரூ.10,000க்கு மேல் வருவாய் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது
 


மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் 
 


கடைகள் இனிமேல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 



பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும்
 

சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு 
தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு 
 

மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்
 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும்
 

 பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் 



காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். 

வெளியூர்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி.


டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி.

உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி.

உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி இல்லை
 
திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback