தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், தருமபுரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்