15ம் தேதி முதல் அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்!
அட்மின் மீடியா
0
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வரும் ஜூலை 15 முதல் அபுதாபி மற்றும் அல் அயினில் இருக்கக்கூடிய BLS சர்வதேச நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேசமயம்
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
- 12 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள்,
- கர்ப்பிணிப் பெண்கள்
- மாற்றுத்திறனாளிகள்
போன்றோர்களுக்கு பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு நேரில் வருவதற்கு தொவிலக்கு அளிக்கப்படும் என்றும் மேலும் BLS மையங்களுக்கு வருகை தரும் அனைத்து விண்ணப்பதாரர்களும்
- சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்
- முக கவசம் அணிய வேண்டும்
- கையுறைகளை அணிய வேண்டும்
என்றும் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்