Breaking News

FACT CHECK: பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று ஷேர் செய்யப்படும் செய்தியின் உணமை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி ஒரு புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் பழைய புகைப்படம் ஆகும் 2017 ம் ஆண்டு புகைப்படம் ஆகும் மேலும்  

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் பாஜக போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். மேலும் மாலேகான் குண்டு வெடிப்பு வழ்க்கில் தொடர்புடையர் என குற்றம் சாட்டபட்டவர் அவர் 

அவரது உடல் நிலை பற்றி சமூக வலைதளங்கலில் தற்போது பல செய்திகள் வலம் வருகின்றது

ஒரு படி மேலே சென்ற போபாலில் பிரக்யா சிங் தாக்கூர்  காணவில்லை என்று கூறி அவரது போபால் நாடாளுமன்ற தொகுதியில் எதிர்க்கட்சியினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதனால், பெரும் சர்ச்சை எழுந்ததால், பாஜக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதில், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் பார்வைக் கோளாறு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் பிரக்யா சிங்கும் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் இடது கண்ணில் கட்டு போடப்பட்டுள்ள நிலையில் பேசும் பிரக்யா தனக்கு தலையில் சிறிய வீக்கம் ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், இது மட்டுமின்றி கண்ணில் பார்வை பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பிரக்யா சிங் தாக்கூர் பேசுகின்றார்

எனவே பிரக்யா சிங் தாக்கூர் பற்றிய செய்தியில் அவர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவது உணமைதான் ஆனால் அந்த புகைப்படம் பழையது ஆகும் 


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback