Breaking News

FACT CHECK: கொரோனா வைரஸ் குணப்படுத்த இந்த மருந்துகளை பயன்படுத்துங்கள் என்ற டாக்டர் லட்டர் பேடு செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கொரோனா வைரஸ்  குணப்படுத்த இந்த மருந்துகளை பயன்படுத்துங்கள் என்று ஒரு டாக்டர் லட்டர் பேடுடன் ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


கொரோனா வைரஸைக் கையாள்வதற்கு தவறான வழிமுறைகள் போலி சிகிச்சைகள் என  இணையத்தில் ஏராளமான தவறான தகவல்கள் உள்ளன.

இந்த பட்டியலில்   ஒரு டாக்டரின் லட்டர் பேடில் போலி கையொப்பத்துடன் ஒரு போலி மருந்தும் வைரல் ஆகின்றது.

டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் பணிபுரியும் மூத்த ஆலோசகர் டாக்டர் ராஜ் கமல் அகர்வாலின் லட்டர் பேடில் இது யாருக்காவது தேவலைப்படலாம் என்ற வரியுடன் எழுதப்பட்ட சில மருந்து பெயர்கள் அதில் உள்ளன்

மேலும் டாக்டர் அகர்வால் அவர்களும் அத்தகைய மருந்துகளை தான் எழுதவில்லை என்று மறுத்து விட்டார். மேலும் அது போலியானது என்று கூறுகிறார். மருந்துகளில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளை யாரும்  பயன்படுத்த  கூடாது என்றும் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார்


அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback