FACT CHECK: பைக் சானிடைசஸர் செய்யும் போது தீப்பிடித்ததா? எங்கு நடந்தது? எதனால் நடந்தது?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இரு சக்கர வாகனத்தினை சானிடைசர் செய்யும் ஏற்பட்ட தீ விபத்து என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மையானது தான்
அந்த சம்பவம் கடந்த 31.05.2020 அன்றுகுஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள அரவிந்த் காட்டன் மில்லில் நடந்துள்ளது
அந்த மில்லின் பாதுகாப்பு காவலர் அங்கு வரும் பைக்கை சுத்தப்படுத்த கிருமி நாசினையினை பயன்படுத்தினார். இதற்கிடையில், பைக்கில் திடீரென தீப்பிடித்தது. நல்லவேளை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை
அரவிந்த் மில்லில் பாதுகாப்புப் பணியாளர் இது குறித்து கூறியபோது பைக் சுத்திகரிக்கும் போது இன்ஜின் மிகவும் சூடாக இருந்துள்ளதாலும், இன்ஜின் ஆன் செய்யபட்டு இருந்ததாலும் தீ பிடித்துள்ளது என தெரிகின்றது என கூறினார்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி