கீழடி ஆராய்ச்சியில் கிடைத்த லா இலாஹ இல்லல்லாஹ் தங்க நானயம்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் 6ம் நூற்றாண்டில் பயன்படுத்திய சிரியா நாட்டின் நாணயம் கிடைத்துள்ளது என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி உண்மைதான்
தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றது
இந்த ஆராய்ச்சியானது ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது
கீழடி 2300 வருடங்களுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ஆனால் இங்கு பெரிதாக தங்க நாணயங்கள் கிடைத்ததில்லை. தற்போது கீழடியின் தொடர்ச்சியான அகரத்தில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கிடைத்துள்ளது,
அதேபோல் இலந்தக்கரையில் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளது.
இந்த நாணயத்தை வைத்து பார்க்கும் போது தமிழகத்திற்கும் அரபு நாட்டிற்க்கும் மத்தியில் வணிக தொடர்பு இருந்திருக்கலாம். அல்லது கேரளாவை சேர்ந்த சேரமான் பெருமான் அவர்களுடன் தொடர்பு இருந்திருக்கலாம் ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டுடன் வணிக தொடர்பு வைத்திருந்தார்கள். எதுவாக இருந்தாலும் சரி நம் முன்னோர்கள் அரபு நாடுகளுடன் எதோ ஒரு விஷயத்தில் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி