தமிழகத்தில் நாளை பள்ளிவாசல் திறப்பு இல்லை: ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கண்ணியமிகு ஆலிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நீண்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைப்பதற்காக, ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்குமாறு ஜமாஅத்துல் உலமா சபை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.
இக்கோரிக்கையை தமிழக அரசு கனிவோடு ஏற்றுக்கொண்டது என்ற போதிலும், சமீப சில நாட்களாக கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதால், தற்போதைக்கு வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை .
எனவே தமிழக அரசின் முடிவு வரும் வரை பொறுத்து இருக்குமாறு அனைத்து ஆலிம்களையும் ஜமாஅத்துகளையும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது. நமது வழிபாடுகளை இறையச்சத்தோடு இல்லங்களில் நிறைவேற்றத் தவற வேண்டாம். நம்முடைய மாநிலம் நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வர தொடர்ந்து துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தமிழ்நாட்டையும் இந்திய திருநாட்டையும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீட்டு அனைத்து மக்களுக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும், கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன். என செய்தி வெளியிட்டுள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி