சவூதி அரேபியா முழுவதும் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது
அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்ட நிலையில் இன்று 21 ம் தேதி காலை 6 மணி முதல் அந்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கா, ஜித்தா உட்பட விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதும் நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பொது இடங்களில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்