Breaking News

”இந்தியா” பெயரை மாற்றக் கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அட்மின் மீடியா
0
டெல்லியை சேர்ந்த நமாஹ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 



இந்தியா என்ற பெயர் ஆங்கில பெயர் ஆகும் மேலும் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாகவும், நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேசமயம், நாட்டின் பெயரை பாரத் என மாற்றக் கோரிய மனுவின் நகலை, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இந்த மனுவை கோரிக்கை மனுவாக கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback