Breaking News

ஜூலை 7 முதல் விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி..!!

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் வெளிநாட்டவர்களின் வருகைக்கு தடை இருந்த அமீரகத்திற்க்கு தற்போது ஜூலை 7, 2020 முதல் துபாயில் உள்ள விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


அமீரகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது பெருமளவில் குறைந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. 

இதனால்  அமீரகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு  கட்டுப்பாடு மற்றும் பல்வேறு தடைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு, பழைய நிலை திரும்பி வருகிறது. 


இந்நிலையில், ஜூலை 7, 2020 முதல் துபாயில் உள்ள விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பிறப்பித்த உத்தரவு மற்றும் மகுட இளவரசர் துபாய் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களது ஆதரவின் பேரில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது


அந்த புதிய அறிவிப்பின் படி அடுத்த மாதம் ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாட்டவர்கள் துபாய் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருபவர்களுக்கு சில நிபந்தனைகளையும் உச்ச குழு வெளியிட்டுள்ளது.

  • கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான சோதனை முடிவு  வைத்திருக்க வேண்டும் என்றும், 

  • மேலும் அந்த சோதனை எடுக்கப்பட்டு 96 மணி நேரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

  • கொரானா சோதனை முடிவு இல்லாத பட்சத்தில் துபாய் விமான நிலையத்தில் கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் 

  • கொரோனா பரிசோதனையில் பாஸிட்டிவ்  பெறும் வெளிநாட்டவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Give Us Your Feedback