மலேசியாவில் இருந்து 5 விமானங்கள் தமிழகத்திற்க்கு மூன்றாம் கட்ட சிறப்பு விமானங்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திட்டத்தின் 3ம் கட்டமாக மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் ஜூன் 11 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி மலேசியாவில் இருந்து 5 விமானங்கள் தமிழகத்திற்கு வரஉள்ளது
ஜூன் 11 ஆம் தேதி மலேசியா கோலாம்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
ஜூன் 12 ஆம் தேதி மலேசியா கோலாம்பூரில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
ஜூன் 13 ஆம் தேதி மலேசியா கோலாம்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
ஜூன் 16 ஆம் தேதி மலேசியா கோலாம்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
ஜூன் 19 ஆம் தேதி மலேசியா கோலாம்பூரில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என மலேசியாவிற்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
@hcikl is pleased to share schedule of #VandeBharatMission flights from Kula Lumpur to various Indian cities from 9-19 June. Ticketing Information is been shared again to safeguard from unscrupulous elements/agents.@MEAIndia @MoCA_GoI @PIB_India @ani_digital @DDNewslive pic.twitter.com/ATOLI0evg0
— India in Malaysia (@hcikl) June 3, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்