குவைத் ஹவுசிங் ஏஜென்சியில் பணிபுரியும் 33 % வெளிநாட்டினர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு..!!
அட்மின் மீடியா
0
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு மக்களையே பணியமர்த்தும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், தற்பொழுது அந்நாட்டில் 30 சதவீதம் மட்டுமே அந்நாட்டு குடிமக்களும் மீதமுள்ள 70 சதவீதமும் வெளிநாட்டவர்களும் இருப்பதால், வெளிநாட்டவர்களின் மக்கள் தொகையினை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக மாற்றுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும்,
அந்நாட்டின் வீட்டுவசதி அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ராணா அல் ஃபரிஸ் வெளியிட்ட அறிக்கையில்,
வீட்டு ஊழியர்களுக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு குடிமக்களை மாற்றுவதற்கான மூன்று கட்ட திட்டம் நிறைவுற ஒரு வருடம் ஆகும் என்றும் ஒவ்வொரு கட்டத்திலும் 33 சதவீத வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இறுதியில் 398 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலையை தொடர்ந்து புதுப்பிக்காமல், அந்த வேலைகளில் அவர்களுக்கு பதிலாக நாட்டு குடிமக்களை பணியிலமர்த்த பயிற்சியளிக்கும் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்க்கனவே அந்நாட்டின் எண்ணெய் துறையில் வெளிநாட்டினரை பணியமர்த்துவது இனி நிறுத்தப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடதக்கது
மேலும் படிக்க: இனி வெளிநாட்டிரை குவைத் ஆயில் கம்பெனியில் பணியமர்த்துவது நிறுத்தப்படும்: எண்ணெய் துறை அமைச்சர் அறிவிப்பு..!!
Tags: வெளிநாட்டு செய்திகள்