Breaking News

தமிழகத்தில் 1,018 ஊர் பெயர்களில் மாற்றம்... இனி உங்க ஊர் பெயர் எப்படி எழுதனும் தெரியுமா: PDF இணைப்பு:

அட்மின் மீடியா
1
தமிழகத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் தமிழில் ஒருமாதிரியும் ஆங்கிலத்தில் ஒரு மாதிரியும் உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக தூத்துக்குடியை tuticorin என்று அழைப்பார்கள். இனி தூத்துக்குடி என்று தான் அழைக்க வேண்டும். ஆங்கில உச்சரிப்பும் எழுத்தும் மாற்றப்படும்..


இது போல் தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது  தஞ்சாவூரை tanjore என்று அழைப்பார்கள். இனி அதை thanjavur என்று தான் அழைக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு ஊர்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் ஒரு உச்சரிப்பும், தமிழில் ஒரு உச்சரிப்பும் இருந்து வந்ததுள்ளதை அரசு மாற்றி உள்ளது. இனி தமிழ் உச்சரிப்பில் தான் ஊர்களின் ஆங்கில பெயர்களும் இருக்க வேண்டும், அத்துடன் தமிழ் உச்சரிப்பில் தான் ஆங்கிலத்தில் ஊர்களின் பெயர்களை எழுத வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. எங்க ஊர் திருநெல்வேலி இல்லை சுத்தமான தமிழில் ஆங்கிலத்தில் தமிழிலும் பெயர் உள்ள ஊர் எங்க ஊர் திருநெல்வேலி தான்

    ReplyDelete